திருக்குறள் - 74     அதிகாரம்: 
| Adhikaram: anputaimai

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

குறள் 74 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anpu eenum aarvam udaimai adhueenum" Thirukkural 74 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு ஆர்வமுடைமை ஈனும் - உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் - அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டு பண்ணும். நாடாமை வருந்தித் தேடாமை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு என்பது பிறரிடத்தில் செல்லும் ஆர்வம் என்னும் விருப்பத்தினை உண்டாக்கும். ஆர்வம் என்னும் அந்த விருப்பம் நட்பு என்று சொல்லப்படுகின்ற அளவு கடந்த சிறப்பினைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு தருகின்ற ஆர்வம் உண்டானால் அதுதரும் நல்லபன்புகள் நாட முடியாத சிறப்புகளாகும் .

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும்.

Thirukkural in English - English Couplet:


From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.

ThiruKural Transliteration:


anpu eenum aarvam udaimai adhueenum
naNpu ennum naadaach chiRappu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore