Kural 441

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aRanaRindhu mooththa aRivutaiyaar kaeNmai
thiRanaRindhu thaerndhu koLal.

🌐 English Translation

English Couplet

As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care.

Explanation

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

2 மணக்குடவர்

அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.

3 பரிமேலழகர்

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை அறத்தின் இயல்பையறிந்து தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பை; திறன் அறிந்து தேர்ந்து கொளல் - தரம் அறிந்து ஆய்ந்து பார்த்துத் தழுவிக் கொள்க. அறத்தின் தன்மையை நூலாலன்றி உத்தியாலும் பட்டறிவாலும் அறியவேண்டுதலின், 'அறனறிந்து' என்றார். மூத்தல் ஆண்டாலும் அறிவாலும் முதிர்தல். அறிவுடையார் அரசு நயன்மையையும் (நீதியையும்) உலகியலையும் ஒருங்கே அறிந்தவர். திறனறிதல் தலையிடை கடை யென்னுந் தரமறிதல்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அறத்தினது சிறப்பினையறிந்து தன்னைவிட மூத்த அறிவுடைய பெரியார்களது நட்பின் அருமையினையறிந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

6 சாலமன் பாப்பையா

அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

7 கலைஞர் மு.கருணாநிதி

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

8 சிவயோகி சிவக்குமார்

அறம் எனப்படும் வாழும் முறை அறிந்து முன் அனுபவம் பெற்ற சிறந்த அறிவுடையாரின் உறவை அவரின் திறன் அறிந்து விரும்பி ஏற்க வேண்டும்.

More Kurals from பெரியாரைத் துணைக்கோடல்

அதிகாரம் 45: Kurals 441 - 450

Related Topics

Because you're reading about Seeking Great Counsel

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature