அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
Transliteration
ariyavatru Lellaam aridhae periyaaraip
paeNith thamaraak koLal.
🌐 English Translation
English Couplet
To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.
Explanation
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
2 மணக்குடவர்
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல். பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.
3 பரிமேலழகர்
செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்; அரியவற்றுள் எல்லாம் அரிதே -அரசர் பெறக்கூடிய அரும்பேறுக ளெல்லாவற்றுள்ளும் அரியதாம். ஏகாரம் தேற்றம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
ஆற்றல் மிகுந்த பெரியார்களை அவர் மகிழ்வன செய்து தமக்குச் சிறந்த துணையாகக் கொள்ளுதல், அரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் அரிதானதாகும்.
6 சாலமன் பாப்பையா
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
7 கலைஞர் மு.கருணாநிதி
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
அரிதானவைகளில் அரிதானது பெரியவர்களை மதித்துக் காத்து உறவுக் கொண்டாடுவது.
More Kurals from பெரியாரைத் துணைக்கோடல்
அதிகாரம் 45: Kurals 441 - 450
Related Topics
Because you're reading about Seeking Great Counsel