Kural 483

அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அற஧ந்து செயின்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aruvinai yenpa uLavoa karuviyaan
kaalam aRindhu seyin.

🌐 English Translation

English Couplet

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?.

Explanation

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

2 மணக்குடவர்

அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.

3 பரிமேலழகர்

அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கருவியான் காலம் அறிந்து செயின் - சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; அருவினை என்ப உளவோ - அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ ? இல்லை . கருவிகள் ஐவகையாற்றலும் நால்வகை ஆம்புடைகளுமாம் . அவற்றொடு காலமும் வேண்டுமென்பதற்குக் 'கருவியான்' என்றார் . 'உளவோ' என்னும் வினா எதிர்மறை விடையை அவாவுவது .

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அவற்றை முடித்ததற்கு ஏற்ற கருவிகளுடனே காலமறிந்து செய்வாராயின், செய்வதற்கு அருமையான தொழில்கள் என்று சொல்லப்படுவனவும் உண்டோ?.

6 சாலமன் பாப்பையா

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

7 கலைஞர் மு.கருணாநிதி

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

8 சிவயோகி சிவக்குமார்

அரிய செயல் என்று எதுவும் இல்லை தேவையான கருவியும் காலமும் அறிந்து செயல்பட்டால்.

More Kurals from காலமறிதல்

அதிகாரம் 49: Kurals 481 - 490

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature