Kural 923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

eendraal mukaththaeyum innaadhaal enmatruch
chaandroar mukaththuk kaLi.

🌐 English Translation

English Couplet

The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?.

Explanation

Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

2 மணக்குடவர்

தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்? எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.

3 பரிமேலழகர்

ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்? - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்? (மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ?என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - மக்கள் எக்குற்றஞ் செய்யினும் பொறுத்துக் கொள்ளும் மட்டற்ற அன்புள்ள தாய் முன்பும் கள்ளுண்டு வெறித்தல் துன்பந் தருவதாம்;மற்றுச் சான்றோர் முகத்து என்- பின்பு ; எக்குற்றமும் பொறாத அறிவுடையோர் முன் அது எத்தகையதாம்? ஐம்புலனு மடங்கி அடியோடு உணர்விழத்தலும், வாய்காவாது மறைவெளிப்படுத்தலும் பித்தர்போற் பிதற்றலும்,ஆடை விலகலும் அற்றம் மறையாமையும், தீநாற்றம் வீசுதலும், வாய் நுரைதள்ளுதலும், வழியிற் கிடத்தலும் வழிப்போக்கர் பழித்தலும், ஈமொய்த்தலும், இளஞ்சிறார் சிரித்தலும், கண்ணாரக்காணின் , பெற்றதாயும் பொறாது கண்டனஞ் செய்வளாதலின், கள்ளக் கண்ணாலுங் காணப் பொறாது நெடுந்தொலைவில் நீங்கும் தூயவொழுக்கமுள்ள சான்றோர்க்கு, அக்காட்சி அளவிறந்த அருவருப்பையும் வெறுப்பையும் விளைக்கும் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம்.உம்மை உயர்வு சிறப்பு.'மற்று' பின்மைப் பொருளது. 'ஆல்' அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.

6 கலைஞர் மு.கருணாநிதி

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

ஈன்றவளே முகம் சுளிக்கும் துன்பம் தரும் கள்போதையை எப்படி சான்றோர்கள் சகித்து முகம் மலர்கள்.

8 புலியூர்க் கேசிகன்

எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும்.

More Kurals from கள்ளுண்ணாமை

அதிகாரம் 93: Kurals 921 - 930

Related Topics

Because you're reading about Avoiding Alcohol

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature