"enaiththaanum nallavai kaetka anaiththaanum" Thirukkural 416 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான். ('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
எனைத்தானும் நல்லவை கேட்க -- ஒருவன் எத்துணைச் சிறிதாயினும் நற்பொருள்களைக் கேட்டறிக; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் -அக்கேள்வியறிவு அத்துணைச் சிறிதாயினும் நிறைந்த வலிமை பெற ஏதுவாகும். எனைத்து அனைத்து என்னும் அளவுச் சொற்கள் பொருளளவுங் கால அளவும் பற்றியன. ஆனும் என்பது ஆயினும் என்பதன்மரூஉ. பலதுளி பெருவெள்ளம். ஆவதுபோல் பல அறிவுத்துணுக்குகள் திரண்டு பேரறிவாவதுடன் ஒரே அறிவுக்குறிப்பு ஒரோவழி உயிரைக் காப்பதும் பெருவெற்றி தருவது முண்டு . ஆதலால் , கேள்வியறிவின் சிற்றளவு பற்றி இகழக்கூடாது என்பதாம்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
எவ்வகையிலும் நல்லவற்றை கேட்டு அறிதல் வேண்டும் அது எல்லா வகையிலும் சிறந்த உயர்வை தரும்.
Thirukkural in English - English Couplet:
Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.
ThiruKural Transliteration:
enaiththaanum nallavai kaetka anaiththaanum
aandra perumai tharum.