திருக்குறள் - 896     அதிகாரம்: 

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

குறள் 896 - திருவள்ளுவர் - ThiruValluvar

"eriyaal sutappatinum uyvundaam uyyaar" Thirukkural 896 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்: பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார். இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார். (தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையே உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், (குறள்-6) அது கூடாதாகலான், அதற்கு ஏதுவாய பிழை செய்யற்க என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - ஒருவன் வீடு பற்றி வேகும்போது அல்லது விளக்குத் தன்மேல் பட்டபோது தீயாற் சுடப்பட்டானாயினும், எண்ணெயாலும் மருந்தாலும் ஒருகால் சாவினின்று தப்புதல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார்- ஆயின், தவத்தாற் பெரியார்க்குத் தவறாக நடந்தவர் ஒருவகையாலும் தப்பார். தீச்சுட்ட புண் சிறிதாயிற் கேடில்லை. உடம்பு முழுதுமாயின் ஓரிரு நாளிற் சாவுண்டாம்.இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலைமையாயின் பண்டுவத்தாற் பிழைத்தலுங் கூடும்.ஆயின்,'குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி' நொடிநேரமுந் தடுக்க முடியாததாதலின், 'உய்யார்' என்றார். உம்மை உயர்வுசிறப்பு.மாதவர் சினத்திற்கு ஆளாகாது காத்துக்கொள்க என்பது கருத்து.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எரியும் நெருப்பில் சுட்ட பின்னும் வாழ்ந்துவிடலாம். வாழவே முடியாது பெரியார்ப் பிழைக் காணும்படி நடப்பவர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியாக உயிர்பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள்.

Thirukkural in English - English Couplet:


Though in the conflagration caught, he may escape from thence:
He 'scapes not who in life to great ones gives offence.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

ThiruKural Transliteration:


eriyaal sutappatinum uyvuNdaam uyyaar
periyaarp pizhaiththozhuku vaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore