திருக்குறள் - 848     அதிகாரம்: 
| Adhikaram: pullarivaanmai

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

குறள் 848 - திருவள்ளுவர் - ThiruValluvar

"evavum seykalaan thaan dhaeraan avvuyir" Thirukkural 848 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தௌ¤யான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன். இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல்லறி வென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம். (உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஏவவுஞ் செய்கலான்-புல்லறிவாளன் தனக்கு நன்மையானவற்றை அறிவுடையார் செய்யச்சொல்லினுஞ் செய்வதில்லை; தான் தேறான்-தானாகவும் தனக்கு நன்மையானவற்றை அறிந்துகொள்வதில்லை; அவ்வுயிர்போம் அளவும் ஓர் நோய்-அத்தகையவன் உயிர் உடம்பினின்று நீங்குமளவும் அவனைத்தாங்கும் உறவினர்க்கெல்லாம் ஒப்பற்ற கொடிய நோயாம். தன்மதியும் சொன்மதியும் இல்லாதவன் அஃறிணைத் தன்மைப் பட்டு நிற்றலின் 'அவ்வுயிர்' என்றும், அவனால் வருந்தொல்லை வாழ்நாள் முழுதுந்தொடர்தலின் 'போஓமளவும்' என்றும், நோய் போல் துன்பந்தருதலின் 'நோய்' என்றும், கூறினார். உம்மை எச்சம். 'போஒம்' இசைநிறையளபெடை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கீழ்படிதலும் இல்லாமல், சுய சிந்தையும் இல்லாமல் இருப்பவருக்கு உயிர் என்பது வாழ்நாள் வரை கிடைத்த நோய்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.

Thirukkural in English - English Couplet:


Advised, he heeds not; of himself knows nothing wise;
This man's whole life is all one plague until he dies.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).

ThiruKural Transliteration:


Evavum seykalaan thaan-dhaeRaan avvuyir
poaom aLavumoar noai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore