"imaippin karappaakku arival anaiththirkae" Thirukkural 1129 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன். இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். (தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகள் ஆற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவிடத்து , அவள் இயற்பட மொழிந்தது .) இமைப்பின் கரப்பாக்கு அறிவல் - என் கண் இமைக்குமாயின் உள்ளிருக்குங் காதலர் மறைவதை யறிந்து சிறிது நேரம் இமையாதே யிருப்பேன் ; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கே , என் காதலர் அன்பிலரென்றும் , என்னைத் துயிலா நோயுறுத்தினாரென்றும் , பழிதூற்றும் இவ்வூர் . தன் கருத்தறியாமை பற்றித் தோழியொடு புலந்து கூறுகின்றாளாதலின் , அவளை வேறுபடுத்து ' இவ்வூர் ' என்றாள் . ஒருபோதும் உள்ளத்திற் பிரியாதவரைப் பிரிந்தாரென்று நீ பழித்தல் தகாது என்பதாம் . 'ஊர்' வரையறுத்த ஆகுபெயர் ,
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
இமைத்தால் மறைந்து விடுவார் என்று அறிந்து இமைக்காமல் இருப்பதால் ஒட்டுமொத்தமாக அவரை அன்பற்றவர் என்னும் இவ்வூர்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
‘இமைப்பின் அவர் மறைவார்’ என்று, கண்களை மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே!
Thirukkural in English - English Couplet:
I fear his form to hide, nor close my eyes:
'Her love estranged is gone!' the village cries.
ThirukKural English Meaning - Couplet -Translation:
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.
ThiruKural Transliteration:
imaippin karappaakku aRival anaiththiRkae
Edhilar ennum-iv voor.