Kural 1041

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

inmaiyin innaadhadhu yaadhenin inmaiyin
inmaiyae innaa thadhu.

🌐 English Translation

English Couplet

You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.

Explanation

There is nothing that afflicts (one) like poverty.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

2 மணக்குடவர்

நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.

3 பரிமேலழகர்

இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இன்மையின் இன்னாதது யாது எனின்- ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே- வருமையைப் போலத் துன்பந்தருவது வறுமையே, வேறொன்றுமில்லை. ஒப்பதின்மை மிக்க தின்மையையும் உடனுணர்த்திற்று. இதில் வந்துள்ள சொல்லணி சொற்பொருட் பின் வருநிலை; பொருளணி தன்னுவமை.

5 சாலமன் பாப்பையா

இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

6 கலைஞர் மு.கருணாநிதி

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

7 சிவயோகி சிவக்குமார்

இல்லாமையைவிட துன்பமானது என்ன என்றால் இல்லாமையில் இல்லாமையே துன்பமானது. (வறுமையை விட கொடியது வறுமையே).

8 புலியூர்க் கேசிகன்

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை.

More Kurals from நல்குரவு

அதிகாரம் 105: Kurals 1041 - 1050

Related Topics

Because you're reading about Poverty

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature