திருக்குறள் - 1224     அதிகாரம்: 
| Adhikaram: pozhudhukantirangal

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

குறள் 1224 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaadhalar ilvazhi maalai kolaikkalaththu" Thirukkural 1224 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும். இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மாலை-காதலர் உடனிருந்த நாளெல்லாம் என் உயிர் தளிர்ப்புற வந்த மாலை, காதலர் இல்வழி -அவர் , நீங்கியவிடத்து;கொலக்களத்து ஏதிலர் போல வரும் -கொலைக்களத்திற் கொலைஞர் வருவது போல என்னுயிரைக் கவர வரும். இதனால் நான் ஆற்றுமா றெங்ஙனம் என்பது குறிப்பெச்சம்.ஏதிலர் ஏதும் அன்பிலாதவர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் உடன் இல்லாத மாலைப் பொழுது கொலைக் களத்தில் இருக்கும் இரக்கமில்லாதவரைப் போல் வரும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காதலர் அருகே இல்லாத போது, கொலை செய்யும் இடத்திலே ஆறலைப்பார் வருவதைப் போல, இம் மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே!

Thirukkural in English - English Couplet:


When absent is my love, the evening hour descends,
As when an alien host to field of battle wends.

ThirukKural English Meaning - Couplet -Translation:


In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

ThiruKural Transliteration:


kaadhalar ilvazhi maalai kolaikkalaththu
aedhilar poala varum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore