திருக்குறள் - 1145     அதிகாரம்: 
| Adhikaram: alararivuruththal

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

குறள் 1145 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaliththorum kallundal vaettatraal kaamam" Thirukkural 1145 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போலக் காமமும் அலராகுந்தோறும் இனிதாகும். இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது. ('வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


களித்தொறும் கள் உண்டல் வேட்ட அற்று-கட்குடியர்க்குக் கள்ளுண்டு வெறிக்குந்தோறும் அக் கள் விருப்பமாதல் போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது-காம வின் பர்க்கு அலர் பரவுந்தோறும் அக்காமாம் இனிதாகின்றது. வேட்டற்று என்பது வேட்கப்பட்டற்று என்னும் செயப்பாட்டு வினைப் பொளுளது. 'ஆல்' அசை நிலை. காமமிகுதியால் அலரும் இன்பந்தருகின்றது என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


களிக்கும் இன்பம் தேவைப்படும் பொழுது கள் உண்ண வேண்டும் என்பதைப் போல் காம் வெளிப்படும் பொழுதெல்லாம் இனிமையாகிறது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலை விரும்பினாற் போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட மேலும் இனிமையாகின்றது.

Thirukkural in English - English Couplet:


The more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me! .

ThirukKural English Meaning - Couplet -Translation:


As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

ThiruKural Transliteration:


kaLiththoRum kaLLuNdal vaettatraal kaamam
veLippatunh thoaRum inidhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore