கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.
Transliteration
kaNNoattam illavar kaNNilar kaNNutaiyaar
kaNNoattam inmaiyum il.
🌐 English Translation
English Couplet
Eyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign.
Explanation
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.
2 மணக்குடவர்
கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே: கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை.
3 பரிமேலழகர்
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்- கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை. (கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்- கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்-கண்ணுடையவர் எப்போதேனும் என்ன கரணியம் பற்றியும் கண்ணோட்ட மில்லாதவராகவும் இரார். காட்சியினாற் கொள்ளும் சிறந்த பயன் இன்மையால் 'கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் ' என்றார். அதை வற்புறுத்தவும் குறள் நிரம்பவும் பின்னும் அதை எதிர்மறை முகத்தாற் கூறினார். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுடையரும் அல்லர்; கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதிருப்பதும் இல்லை.
6 சாலமன் பாப்பையா
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.
7 கலைஞர் மு.கருணாநிதி
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
8 சிவயோகி சிவக்குமார்
பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லாதவர் கண் இல்லாதவர். கண் இருந்தும் பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லை என்றால் கண் இல்லாதவரே.
More Kurals from கண்ணோட்டம்
அதிகாரம் 58: Kurals 571 - 580