கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
Transliteration
katanenpa nallavai ellaam katanaRindhu
saandraaNmai maeRkoL pavarkku.
🌐 English Translation
English Couplet
All goodly things are duties to the men, they say
Who set themselves to walk in virtue's perfect way.
Explanation
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
2 மணக்குடவர்
நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று சொல்லுவர் நூலோர்.
3 பரிமேலழகர்
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - இது நமது கடமையென் றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்வினைகளெல்லாம் செய்யப்பட வேண்டிய கடமையாகும் என்று கூறுவர் அறிஞர். சான்றாண்மை நற்குணத் தொகுதியாதலின் அதை மேற்கொண்டவர்க்கு நல்வினையெல்லாங் கடமை யென்பது கருத்து.கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - இது நமது கடமையென் றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்வினைகளெல்லாம் செய்யப்பட வேண்டிய கடமையாகும் என்று கூறுவர் அறிஞர். சான்றாண்மை நற்குணத் தொகுதியாதலின் அதை மேற்கொண்டவர்க்கு நல்வினையெல்லாங் கடமை யென்பது கருத்து.
5 சாலமன் பாப்பையா
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
7 சிவயோகி சிவக்குமார்
கட்டாயம் செய்யவேண்டிய கடன் என்பது நல்லவைகள். அத்தகைய கடனை அறிந்து செயல்படுவதே சான்றாண்மை.
8 புலியூர்க் கேசிகன்
‘நமக்கு இது தகுவது’ என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்
More Kurals from சான்றாண்மை
அதிகாரம் 99: Kurals 981 - 990
Related Topics
Because you're reading about Nobility