கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.
Transliteration
katraaruL katraar enappatuvar katraarmun
katra selachchollu vaar.
🌐 English Translation
English Couplet
Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they.
Explanation
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
2 மணக்குடவர்
கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார். இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.
3 பரிமேலழகர்
கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கற்ற கற்றார்முன் செலச் சொல்லுவார்-தாம் கற்றவற்றைக் கற்றாரவைக்கண் அவர் உளங் கொள்ளும்வகை சொல்லவல்லவர்; கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்ற ரெல்லாருள்ளும் நன்கு கற்றவரென்று கற்றாரால் உயர்த்துச் சொல்லப்படுவர்; "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்-நலமிக்க பூம்புன லூர ! பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால்." (பழமொழி, 7). கற்றார் என்னும் சொல் பன்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலை யணியாம்.
5 சாலமன் பாப்பையா
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
6 கலைஞர் மு.கருணாநிதி
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.
7 சிவயோகி சிவக்குமார்
கற்றவர்களில் கற்றவர் என்பவர் கற்று அறிந்தவர்களின் முன் மேலும் கற்று அறியும்படியாக பேசுவார்.
More Kurals from அவையஞ்சாமை
அதிகாரம் 73: Kurals 721 - 730