Kural 765

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kootrutandru maelvarinum koodi edhir-niRkum
aatra ladhuvae padai.

🌐 English Translation

English Couplet

That is a 'host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands.

Explanation

That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

2 மணக்குடவர்

கூற்றமானது வெகுண்டு தன்மேல்வரினும், சிதறுதல் இன்றியே எதிர் நிற்கவல்ல வலியுடையதே படையாவது. இது மாற்றான் மேல்வந்தால் பொறுக்கவேண்டு மென்றது.

3 பரிமேலழகர்

கூற்றமானது வெகுண்டு தன்மேல்வரினும், சிதறுதல் இன்றியே எதிர் நிற்கவல்ல வலியுடையதே படையாவது. இது மாற்றான் மேல்வந்தால் பொறுக்கவேண்டு மென்றது.

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கூற்று உடன்று மேல் வரினும்-இறப்புத் தெய்வமாகிய கூற்றுவனே சினந்து வந்து தாக்கினும்; கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே-கலையாது எதிர்த்து நின்று பொரும் வலிமையுடையதே; படை-சிறந்த படையாவது. "எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான் அப்போ தந்தக் கூற்றுவன் தன்னைப் போற்றவும் போகான் பொருளொடும் போகான் சாற்றவும் போகான் தமரொடும் போகான் நல்லா ரென்னான் நல்குர வறியான் தீயா ரென்னான் செல்வரென் றுன்னான் திரியா னொருகணந் தறுக ணாளன்." (கபி. 81.35.41) ஆதலின், உம்மை உழர்வு சிறப்பு. சாவின் ஆட்படுத்தமே (personification) கூற்றுவனாயினும், அத்தகைய சிறுதேவன் உண்டென்பதும், அவன் கடவுட்கு அடுத்தபடியாக மறம் நிறைந்தவன் என்பதும், பல பழ மதங்களின் பொதுக் கருத்தாம். ஆற்றல் உடல் வலியும் உளவலியும்.

5 சாலமன் பாப்பையா

எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

6 கலைஞர் மு.கருணாநிதி

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

7 சிவயோகி சிவக்குமார்

இன்றே மரணம் என்றே ஆனலும் கூட்டமாய் எதிர்க்கும் ஆற்றல் உடையதுவே படை.

More Kurals from படைமாட்சி

அதிகாரம் 77: Kurals 761 - 770

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature