திருக்குறள் - 1226     அதிகாரம்: 
| Adhikaram: pozhudhukantirangal

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

குறள் 1226 - திருவள்ளுவர் - ThiruValluvar

"maalainoi seydhal manandhaar akalaadha" Thirukkural 1226 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[இன்று இங்ஙன மாகின்ற நீ அவர் பிரிவிற் குடம்பட்ட தெங்ஙனம் என்ற தோழிக்குச் சொல்லியது.] மாலை நோய் செய்தல் -முன்பெல்லாம் எனக்கு இன்பஞ் செய்து வந்த மாலை. அதற்கு நேர்மாறாக இன்று துன்பஞ் செய்யு மென்பதை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்-காதலர் பிரிவிற்கு முன் நான் அறியவே யில்லை. அறிந்திருந்தேனாயின் அவர் பிரிவிற்கு உடம்பட் டிரேன் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மாலைப் பொழுது தரும் நோய் எப்படிப்பட்டது என்று மணந்தவர் என்னை விட்டு விலகாத காலத்தில் அறியாமல் இருந்தேன்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னை விட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே!

Thirukkural in English - English Couplet:


The pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Previous to my husband's departure, I know not the painful nature of evening.

ThiruKural Transliteration:


maalainoi seydhal manandhaar akalaadha
kaalai arindha thilen.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore