Kural 1136

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

madaloordhal yaamaththum uLLuvaen mandra
padal-ollaa paedhaikken kaN.

🌐 English Translation

English Couplet

Of climbing 'horse of palm' in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid.

Explanation

Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

2 மணக்குடவர்

பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன். இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.

3 பரிமேலழகர்

('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

( மடலூரும் நேரம் இன்றைக்குக் கழிந்துவிட்டதென்ற தோழிக்குச்சொல்லியது .) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - பேதைத் தன்மையுள்ள என் தலைவி கரணியமாக எனக்கு இராமுழுதுங் கண்ணடைப்பதேயில்லை ; யாமத்தும் மடல் ஊர்தல் உள்ளுவேன் மன்ற - அதனால் எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் நான் மடலேறக் கருதுவது உறுதி . இனி , நாளைக் குறைமுடிப்பே னென்று கடத்தி வைக்க வேண்டாமென்பதாம் . ' பேதை ' யென்பது இங்குப் பருவங்குறியாது இளமையும் மடமையுங் குறித்து நின்றது . ' மன்ற ' தேற்றப் பொருளிடைச்சொல் .

5 சாலமன் பாப்பையா

அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

7 சிவயோகி சிவக்குமார்

மடலூர்தலை நள்ளிரவிலும் நினைக்கிறேன் காரணம் மாற்ற முடியாத வேதனையை அடைந்தது இளம்பெண்ணாள் என் கண்.

8 புலியூர்க் கேசிகன்

அப் பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒரு போதும் மூடுதலைச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளையிலும் மடலேறுதலையே நான் நினைத்திருப்பேன்!

More Kurals from நாணுத்துறவுரைத்தல்

அதிகாரம் 114: Kurals 1131 - 1140

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature