Kural 640

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

muRaippatach soozhndhum mutivilavae seyvar
thiRappaatu ilaaa thavar.

🌐 English Translation

English Couplet

For gain of end desired just counsel nought avails
To minister, when tact in execution fails.

Explanation

Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

2 மணக்குடவர்

அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.

3 பரிமேலழகர்

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார். (அக்கூறுபாடாவன: வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

திறப்பாடு இலாதவர் -வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர்; முறைப்படச் சூழ்ந்தும் -செய்யவேண்டிய வினைகளை ஒழுங்குபட எண்ணிவைத்தும் ; முடிவிலவே செய்வர் - செய்யுங்கால் முற்றுப் பெறாதனவாகவே விடுவர். திறப்பாடாவது , வந்த வந்த இடையூற்றை உடனுடன் விலக்குதலும் ஆள் வினையில் உறுதியாயிருத்தலுமாம். 'இலாஅ' இசை நிறையளபெடை. திறப்பாடிலாதவர் பழுதெண்ணுவாரைப்போல் தண்டனைக்குரியவ ரல்லரேனும் விலக்கப் படவேண்டியவரே என்பது கருத்தாம்.

5 சாலமன் பாப்பையா

செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

6 கலைஞர் மு.கருணாநிதி

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

7 சிவயோகி சிவக்குமார்

முறையான சுழ்நிலை அமைந்தாலும் சரியான முடிவுகளை எடுக்கமாட்டார் திறமை இல்லாதவர்.

More Kurals from அமைச்சு

அதிகாரம் 64: Kurals 631 - 640

Related Topics

Because you're reading about Ministers & Advisors

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature