"naanotu nallaanmai pantutaiyen indrutaiyen" Thirukkural 1133 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
( நாண் மட்டுமின்றி நல்லாண்மையு முடையையாதலின் மடலேற முடியாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது . ) நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் - நாணும் சிறந்த ஆண்டகைமையும் பண்டை நாளிற் கொண்டுதாணிருந்தேன் ; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்- ஆயின் அவை காமத்தால் நீங்கிவிட்டமையால் காமம் மிக்கார் ஏறும் மடலினையே இன்று உடையவனாயிருக்கின்றேன் . என் உயிர் உடலோடு நிற்கவேண்டுமாயின் மடலேறுதல்லது வேறுவழியில்லை யென்றானாம் . நான் என்பது இழிசெயலைத் தடுக்கும் மானம் . ஆண்மையென்பது ஒன்றற்குந் தளராத உரம் .
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
நாணத்துடன் நல்ல ஆண்மையோடு முன்னர் இருந்தேன் இன்றோ காமத்தால் காமுற்றவர் ஏறும் மடல் அடைந்தேன்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன்.
Thirukkural in English - English Couplet:
I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm'.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.
ThiruKural Transliteration:
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal.