Kural 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

natpiRku veetrirukkai yaadhenin kotpindri
ollumvaai oondrum nilai.

🌐 English Translation

English Couplet

And where is friendship's royal seat? In stable mind,
Where friend in every time of need support may find.

Explanation

Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

2 மணக்குடவர்

நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின் மனத்தின்கண் ஐயுற வின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை வீற்றிருத்தல்-தலைப்பட இருத்தல்.

3 பரிமேலழகர்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் - நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை. (ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்கு மேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நட்பிற்கு வீற்று இருக்கை யாது எனின்-நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால்; கொட்பு இன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை-ஒருபோதும் வேறுபடாது இயன்ற வழியெல்லாம் தன் நண்பனுக்குதவி அவன் எவ்வகையிலுந் தளராதவாறு தாங்கும் உறுதியாம். அரியணையில் அரசிருக்கையாகிய வீற்றிருக்கை மக்கட்குள் சிறந்த நிலையைக் காட்டுதலால், நட்பின் சிறந்த நிலை இங்கு வீற்றிருக்கை யெனப்பட்டது. நிலை என்பது நீக்கமும் நிலையும் (திருவாசகம், 3:9) என்பதிற்போல உறுதியென்னும் பொருள் கொண்டது.

5 சாலமன் பாப்பையா

நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

நட்பிற்கு சிறந்த இலக்கணம் எது என்றால் கேட்காமலேயே தேவையறிந்து தாங்கும் தன்மையே.

More Kurals from நட்பு

அதிகாரம் 79: Kurals 781 - 790

Related Topics

Because you're reading about Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature