நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.
Transliteration
neyyaal erinhudhuppaem endratraal kavvaiyaal
Kaamam nudhuppeam enal.
🌐 English Translation
English Couplet
With butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love.
Explanation
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
2 மணக்குடவர்
எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்-அயலாரும் பகைவரும் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்துவிடுவோமென்று கருதுதல்; நெய்யால் எரிநுதுப்பேம் என்ற அற்று-நெய்யை வார்த்து நெருப்பை அவிப்போமென்று கருதுவதையொக்கும். வளர்க்குங் கரணம் தளர்க்குங் கரணமாகாது என்பதாம். 'ஆல்' அசைநிலை.
5 சாலமன் பாப்பையா
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
நெய்யால் எரியும் நெருப்பை அடக்குவது எப்படியோ அப்படியே பழிச் சொல்லால் காமம் அடக்க முயல்வது.
8 புலியூர்க் கேசிகன்
‘பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம்’ என்று முயலுதல், ‘நெய்யால் நெருப்பை அவிப்போம்’ என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.
More Kurals from அலரறிவுறுத்தல்
அதிகாரம் 115: Kurals 1141 - 1150