திருக்குறள் - 1254     அதிகாரம்: 
| Adhikaram: niraiyazhidhal

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

குறள் 1254 - திருவள்ளுவர் - ThiruValluvar

"niraiyutaiyen enpenman yaanoen kaamam" Thirukkural 1254 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் நிறையுடையேன் என்பேன்- இதற்கு முன்பெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும்- ஆனால், இன்று என் காமம் கட்டிற்கடங்காது அம்பலப்பட்டுவிட்டது. இனி என் வயத்ததன்று என்பதாம். 'மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரக்கக் குறிப்பு. மன்று படுதல் பலருமறிதல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நிறைவானவன் என்றே இருந்தேன் ஏனோ என் மறைக்க முடியா காமம் மறைவாக இருந்து பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இதுவரையில் நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன்; ஆனால், என் காமம், என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றதே!

Thirukkural in English - English Couplet:


In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

ThiruKural Transliteration:


Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam
Maraiyirandhu Mandru Patum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore