ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.
Transliteration
oliththakkaal ennaam uvari elippakai
naakam uyirppak kedum.
🌐 English Translation
English Couplet
Though, like the sea, the angry mice send forth their battle cry;
What then? The dragon breathes upon them, and they die!.
Explanation
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
2 மணக்குடவர்
கடல்போல ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்; எலி நாகம் உயிர்த்த அளவிலே கெடும். இது படைமிகுத்தது வெல்லுமென்று கருதாது வீரரைத் தௌ¤ந்தாளல் வேண்டுமென்றது.
3 பரிமேலழகர்
எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம் - எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும் - அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும். (உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம் அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என் ஆம்-எலியாகிய பகை பெருந்திரளாகக் கூடிக் கடல் போல் ஆரவாரித்தாலும் பாம்பிற்கு என்ன தீங்கு நேரும்!; நாகம் உயிர்ப்பக் கெடும்-அப்பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே அப்பகை ஒருங்கே அழிந்துபோம். மறங்குன்றிய பகைவர் பலர் திரண்டு முழக்கஞ் செய்தாலும் மறமிஞ்சியவன் அஞ்சான். அவன் கிளர்ந்தெழுந்த துணையானே அவர் கெட்டொழிவர் என்பது பட நின்றமையின் , இது பிறிது மொழி தலணியாம். தொல்படையுள்ளும் பெருமறவன் சிறந்தவன் என்பது கருத்து. உவரியொலித்தக்கால் உவமைத் தொகை. உவரி யொலித்தல் என்னும் வினையுவமத்தால் திரட்சி பெறப்பட்டது. பெருமறவனுக்குப் பெருஞ் சிறப்புச் செய்க என்பது குறிப்பு.
5 சாலமன் பாப்பையா
பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
7 சிவயோகி சிவக்குமார்
நாகத்தின் சப்தம் கேட்டே எல்லாவற்றையும் விட்டோடும் எலிக்கூட்டம் போல் நற்படையால் பகை அழியும்.
More Kurals from படைமாட்சி
அதிகாரம் 77: Kurals 761 - 770