ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.
Transliteration
oodhiyam enpadhu oruvaRkup paedhaiyaar
kaeNmai oreei vidal.
🌐 English Translation
English Couplet
'Tis gain to any man, the sages say,
Friendship of fools to put away.
Explanation
It is indead a gain for one to renounce the friendship of fools.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
2 மணக்குடவர்
ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாதாரோடு நட்பாகுதலை நீங்கி விடுதல். இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது.
3 பரிமேலழகர்
ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல். (நட்பு ஒழிந்தாலும் நீங்காக்கால் 'வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே' மாறு போலத் (நாலடி.180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருவற்கு ஊதியம் என்பது-ஒருவனுக்கு வரவுப்பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇவிடல்- அறிவிலாதாரோடு தெரியாமற் செய்துகொண்ட நட்பைவிட்டுவிட்டு, அவரிடத்தினின்று நீங்கிக்கொள்ளுதலாம். அறிவிலாதார் தொடர்பு தீங்கே விளைத்தலால் ஒரிஇ என்றும்; அவர் தொடர்பை விட்டவிடத்தும் அருகிலிருந்தால், மூங்கிலைச் சார்ந்த சந்தனமரமும் வேதல்போலப் பின்னுந் தீங்குவருதலால் 'விடல்' என்றும்; அவரைவிட்டு நீங்கியபின் தீங்கொழிதலோடு இருமை யின்பத்திற்கும் வழியேற்படுதலால் அதனைப் 'பேறு' என்றும்; கூறினார். 'ஒரீஇ' இன்னிசை யளபெடை.
5 சாலமன் பாப்பையா
அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
ஒருவருக்கு நற்பயன் என்பது, மடத்தனமானவரின் நட்பை விலக்கி விடுவதே.
More Kurals from நட்பாராய்தல்
அதிகாரம் 80: Kurals 791 - 800
Related Topics
Because you're reading about Testing Friendship