திருக்குறள் - 486     அதிகாரம்: 
| Adhikaram: kaalamaridhal

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

குறள் 486 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ookka mudaiyaan otukkam porudhakar" Thirukkural 486 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து. (உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுந்த அரசன் ஊக்க முள்ளவனாயினும் பகைமேற் செல்லாது காலம் பார்த்து ஒடுங்கியிருக்கின்ற இருப்பு ; பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - சண்டையிடும் செம்மறிக்கடா தன்பகையை வலிமையாய்த் தாக்குதற்குப் பின் வாங்கும் தன்மையது . ஒடுக்கம் சோம்பலால் ஏற்பட்டதன்றென்பதற்கு 'ஊக்க முடையான் 'என்றார் . ஒடுக்கத்தின் தேவையும் சிறப்பும் தகர்பின் வாங்குதல் என்னும் உவமையால் விளங்கும் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் உள்ளவர்களின் அமைதி பொருத்தமான தாக்கத்திற்கு பின்வாங்குதல் போன்றது.

Thirukkural in English - English Couplet:


The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.

ThiruKural Transliteration:


ookka mudaiyaan otukkam porudhakar
thaakkaRkup paerunh thakaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore