ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.
Transliteration
ootip perukuvam kolloa nudhalveyarppak
koodalil thoandriya uppu.
🌐 English Translation
English Couplet
And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.
Explanation
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.
2 மணக்குடவர்
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய வுப்பு- இதுபோது இவள் நெற்றி வெயர்க்குமளவு செய்த கலவி்யின்கண் உள்ள இனிமையை ; ஊடிப்பெருகுவமோ -இன்னுமொருகால் இவள் ஊடி யாம் பெறவொண்ணுமோ! இனிமை ஒருங்கே நுகரும் ஐம்புலவின்பம். இனி அவ்வப்போது அரிதென்று பெற்றதன் சிறப்புக் கூறியவாறு. நுதல் வெயர்ப்பச் செய்தது ஒரு சிறந்த கலவிவகை யெனினுமாம். 'கொல்' அசைநிலை 'ஓ' ஐயவினா , 'இவளூடி' என்பது தனிநிலை யமைப்பு.
5 சாலமன் பாப்பையா
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.
6 கலைஞர் மு.கருணாநிதி
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.
7 சிவயோகி சிவக்குமார்
ஊடலினால் பெரும் சிறப்பு நெற்றி வெயர்க்க கூடி மகிழ்வதால் வரும் உப்பு.
8 புலியூர்க் கேசிகன்
நெற்றி வெயர்வு அரும்பும்படி காதலருடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து, அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும் போது பெறுவோமோ?
More Kurals from ஊடலுவகை
அதிகாரம் 133: Kurals 1321 - 1330
Related Topics
Because you're reading about Joy of Reconciliation