Kural 1196

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

orudhalaiyaan innaadhu kaamamkaap pola
irudhalai yaanum inidhu.

🌐 English Translation

English Couplet

Love on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good.

Explanation

Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

2 மணக்குடவர்

ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது. இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

காமம் ஒருதலையான் இன்னாது-ஆடவன் பெண்டு என்னும் இருபாலுள் காதல் ஒருதலைக்கண் மட்டுமிருப்பின் அது துன்பந்தருவதேயாம்; காப்போல இருதலையானும் இனிது-காவாட்டுச் சுமைபோலே இருதலையும அது ஒத்திருந்த விடத்தே இன்பந்தருவதாம். என்னிடத்துள்ள காதல் அவரிடத்து மிருப்பின் இவ்வாறு துன்புறேன் என்பதாம். மூன்றாம் வேற்றுமை ஆனுருபுகள் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தன வேற்றுமை மயக்கம்.

5 சாலமன் பாப்பையா

ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

6 கலைஞர் மு.கருணாநிதி

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

ஒருதலையாய் இல்லாமல் காமம் என்பது காவடி போல் இருதலையாய் இருப்பது என்றும் இனியது.

8 புலியூர்க் கேசிகன்

‘காதல் ஒருதலையானது’ என்றால் மிகவும் துன்பமானது; காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால், அதுவே மிகவும் இனிமையானது.

More Kurals from தனிப்படர்மிகுதி

அதிகாரம் 120: Kurals 1191 - 1200

Related Topics

Because you're reading about Excessive Longing

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature