Kural 161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

ozhukkaaRaak koLka oruvan-than nenjaththu
azhukkaaRu ilaadha iyalpu.

🌐 English Translation

English Couplet

As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.

Explanation

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

2 மணக்குடவர்

ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

3 பரிமேலழகர்

(இதனுள் 'அழுக்காறு' என்பது ஒருசொல்.அதற்குப் பொருள் மேலே (குறள்: 35) உரைத்தாம். அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று 'அழுக்காறாமை' என நின்றது. இப்பொறாமையும் பொறைக்கு மறுதலையாகலின், இதனை விலக்குதற்கு இது பொறை உடைமையின்பின் வைக்கப்பட்டது.) ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.].

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; ஓழுக்காறாக்கொள்க-தனக்குரிய ஓழுக்க நெறியாகக்கொள்க. இயல்பு இயல்பான தன்மை ஒழுக்காறாக் கொள்ளுதல் உயிரினுஞ் சிறப்பாகப் பேணிக் காத்தல்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

ஒருவன் தன்னுடைய மனத்தில் பொறாமை என்னும் குற்றம் இல்லாத தன்மையினைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்.

6 சாலமன் பாப்பையா

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

7 கலைஞர் மு.கருணாநிதி

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

8 சிவயோகி சிவக்குமார்

ஒழுக்கம் மாறாது இருக்க ஒருவர் தன் மனதில் பொறாமை அற்ற இயல்பை பெறவேண்டும்.

More Kurals from அழுக்காறாமை

அதிகாரம் 17: Kurals 161 - 170

Related Topics

Because you're reading about Freedom from Envy

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature