பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.
Transliteration
paedhaimaiyuL ellaam paedhaimai kaadhanmai
kaiyalla than-kat seyal.
🌐 English Translation
English Couplet
'Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove.
Explanation
The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.
2 மணக்குடவர்
அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல். இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.
3 பரிமேலழகர்
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பேதைமையுள் எல்லாம் பேதைமை - பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; கை அல்லதன்கண் காதல் செயல் - ஒருவன் தனக்குத்தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல். கையல்லது செய்தல் , இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப் பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செய்தொழுகுதல். 'கை' ஒழுக்கம்; ஆகுபெயர்.
5 சாலமன் பாப்பையா
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
மடமையானவற்றில் முதன்மையானது தனக்கு பொருந்தாத செயல்களை செய்ய விரும்புவது.
8 புலியூர்க் கேசிகன்
பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.
More Kurals from பேதைமை
அதிகாரம் 84: Kurals 831 - 840
Related Topics
Because you're reading about Folly