திருக்குறள் - 1283     அதிகாரம்: 
| Adhikaram: punarchchividhumpal

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

குறள் 1283 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paenaadhu petpavae seyyinum konkanaik" Thirukkural 1283 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மைப் புறக்கணித்துத் தாம் விரும்பியவற்றையே செய்வாராயினும் ; கொண்கனைக் காணாது கண் அமையல-காதலரைக் காணாது என் கண்கள் அமைகின்றன வல்ல அத்தகைய கண்களை வைத்துக்கொண்டு நான் புலப்பதெங்ஙனம் என்பதாம் . தன்விதுப்புக்கண்மே லேற்றப்பட்டது . ஏகாரம் பிரிநிலை . எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


என்மீது அக்கறையின்றி தன் செயல் செய்தாலும் கொண்டவனை காணாமல் அமைதி அடைவதில்லை கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையவில்லையே!

Thirukkural in English - English Couplet:


Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

ThiruKural Transliteration:


paenaadhu petpavae seyyinum konkanaik
kaanaa thamaiyala kan.

திருத்தமிழ்
© 2025 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore