திருக்குறள் - 723     அதிகாரம்: 
| Adhikaram: avaiyanjaamai

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

குறள் 723 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pakaiyakaththuch chaavaar eliyar ariyar" Thirukkural 723 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர். இஃது அவையஞ்சாமை அரிதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகையகத்துச் சாவார் எளியர்-போர்க்களத்துள் அஞ்சாது புகுந்து பகைவரொடு பொருது மறத்தொடு சாகவல்லவர் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதவர் அரியர்-ஆயின், ஓர் அவையிடத்துப் புகுந்து அஞ்சாது நின்று உரை நிகழ்த்த வவ்லவர் சிலரே. இது பகையஞ்சார்க்கும் அவையஞ்சார்க்குமுள்ள தொகைவேற்றுமை கூறிற்று. அமர்க்கள மறத்தினும் அவைக்கள மறமே சிறந்த தென்பது கருத்து. ஒப்புமை கூறும் உவமையிற் போன்றே ஒவ்வாமை கூறும் வேற்றுமையிலும் உள்ள இரு கூறுகளுள், ஒன்றன் அடை இன்றொன்றைச் சாருமாதலின், அஞ்சாமை 'சாவார்' என்பதனொடு கூட்டப்பட்டது. பொருட்கேற்பப் பொருதல் சொல்லுதல் என்னும் இரு சாரார் வினைகளும் வருவித்துரைக்கப்பட்டன. எளிமையும் அருமையும் பெரும்பான்மை சிறுபான்மையொடு தாழ்வுயர்வும் உணர்த்தி நின்றன. இம் முக்குறளாலும் அவையஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைக்கொண்டு சாகத் துணிபவர்கள் ஏராளம். அரிய சிலரே அவையில் பேச அஞ்சாதவர்கள்.

Thirukkural in English - English Couplet:


Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

ThiruKural Transliteration:


pakaiyakaththuch chaavaar eLiyar ariyar
avaiyakaththu anjaa thavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore