திருக்குறள் - 728     அதிகாரம்: 
| Adhikaram: avaiyanjaamai

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

குறள் 728 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pallavai katrum payamilarae nallavaiyul" Thirukkural 728 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார். இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார்-தாம்கற்ற நல்ல பொருள்களை நல்லறிஞர் இருந்த அவைக்கண் தாம் கொண்ட அச்சத்தினால் அவர்க்கு விளங்குமாறு எடுத்துச் சொல்லும் ஆற்றலில்லாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே-பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே யாவர். கற்றோர் கல்வியைக் கற்றோரே அறிவராதலின், கற்றோர்முன் சொல்லாத கல்வி தமக்கேயன்றிப் பிறர்க்குப் பயன்படா தென்பதாம். உம்மை உயர்வுசிறப்பு. ஏகாரம் தேற்றம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பல துறை நூல்களை கற்றும் பயன் இல்லாதவர் நல்லனவற்றை நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லாதவர்.

Thirukkural in English - English Couplet:


Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.

ThiruKural Transliteration:


pallavai katrum payamilarae nallavaiyuL
nanku selachchollaa thaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore