Kural 349

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

patratra kaNNae piRappaRukkum matru
nilaiyaamai kaaNap padum.

🌐 English Translation

English Couplet

When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability.

Explanation

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

2 மணக்குடவர்

ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

3 பரிமேலழகர்

பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்- ஒருவனுக்கு இருவகைப் பற்றும் நீங்கியபொழுதே அப்பற்று நீக்கம் அவன் பிறப்பை ஒழிக்கும் ; மற்று நிலையாமை காணப்படும் - அவை நீங்காத பொழுது அவற்றால் மாறிமாறிப் பிறந்திறந்து வருகின்ற நிலையாமையே காணப்படும். கரணகம் (காரணம்) நீங்கின் கருமகமும் (காரியமும்) நீங்குமாதலால் 'பற்றற்ற கண்ணே' என்றார். மற்று - மற்றப்படி

5 சாலமன் பாப்பையா

ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.

7 சிவயோகி சிவக்குமார்

(காட்சிகளை தன் விருப்பத்தில் காண்கிறோம் என்ற அனுபவம் பெரும் பொழுதே வள்ளுவரின் இக்குறள் எவ்வளவு ஆழமானது என்று புரியும்) ௯, பற்றுகளை துறந்த கண்ணே பிறப்பு அற்ற நிலையை உண்டாக்கும் மற்றபடி நிலையாமையே காணப்படும்.

More Kurals from துறவு

அதிகாரம் 35: Kurals 341 - 350

Related Topics

Because you're reading about Renunciation

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature