Kural 438

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

patruLLam ennum ivaRanmai etruLLum
eNNap paduvadhon Randru.

🌐 English Translation

English Couplet

The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.

Explanation

Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

2 மணக்குடவர்

கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று. இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.

3 பரிமேலழகர்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது. (இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை - பொருளைச் செலவிட வேண்டிய விடத்துச் செலவிடாது தன்னுடனேயே வைத்துக் கொள்ளுமாறு, உ ள் ள த் தா ல் அதை இறுகப்பற்றும் கஞ்சத்தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - பிற குற்றங்களோடு சேர்த்தெண்ணப்படாது தனியாக வைக்க வேண்டிய ஒரு குற்றமாகும். கஞ்சத்தனம் எல்லா நற்குணங்களையும் அடக்கி அவற்றைப் பயன்படாவாறு செய்து விடுதலின், ' எற்றுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று' என்றார். எவற்றுள்ளும் என்பது ' எற்றுள்ளும் ' என இடைக்குறைந்து நின்றது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

செய்யவேண்டிய ஈகைச் செயல்களைச் செய்யாமல் கருமித்தனத்தால் பற்றுதலை வைத்திருக்கும் அத்தன்மை, குற்றமான தன்மைகளும் ஒன்றாக வைத்து எண்ணப்படுவதென்று அன்று; அது மிகுந்த குற்றமாகும்.

6 சாலமன் பாப்பையா

செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.

8 சிவயோகி சிவக்குமார்

எனக்கு மட்டும் என்ற ஆசைப்படும் பற்று கொள்ளும் உள்ளம் என்ன உள்ளம் என்று எண்ணப்படும் ஒன்று.

More Kurals from குற்றங்கடிதல்

அதிகாரம் 44: Kurals 431 - 440

Related Topics

Because you're reading about Removing Faults

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature