திருக்குறள் - 912     அதிகாரம்: 
| Adhikaram: varaivinmakalir

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.

குறள் 912 - திருவள்ளுவர் - ThiruValluvar

"payan dhookkip panpuraikkum panpin makalir" Thirukkural 912 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக்கூறும் குணமில்லாத மகளிரது இன்பத்தை யாராய்ந்து பார்த்து அவரைச் சாராதொழிக. இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாம் தொகுத்துக் கூறினார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக. (பண்பு, சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும் அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பதுதோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பயன்தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனிடமிருந்து பெறக்கூடிய பொருளின் அளவை ஆராய்ந்தறிந்து அதைப்பெறும் பொருட்டுத் தாம் அன்புடையவராகச் சொல்லும் அன்பில்லா விலைமகளிரின் ;நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுக்க வகையை ஆராய்ந்தறிந்து அவரொடு கூடாது விடுக. பண்பு சொல்லளவாக வாயிலல்லது உண்மையாக உள்ளத்திலில்லாமையால் 'பண்பின் மகளிர்' என்றும், அது அவர் குலவியல் பாதலை உரையளவையால் மட்டுமின்றிக் காட்சியளவையாலும் அறிதல் கூடுமாயின் 'நயன்றூக்கி' யென்றும், பினபு பார்த்தலுமின்றி வரையறவாக விட்டுவிலக வேண்டுமென்பார் 'விடல்' என்றும் , கூறினார்.'நள்ளா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பயனை அறிந்து அதற்கேற்றார் போல் பழகும் பண்புடைய பண்பில்லா பெண்களை மேன்மை அறிந்து உறவாடமல் தவிர்க்க வேண்டும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதனை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக.

Thirukkural in English - English Couplet:


Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women's worth, from their society depart.

ThirukKural English Meaning - Couplet -Translation:


One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

ThiruKural Transliteration:


payan-dhookkip paNpuraikkum paNpin makaLir
nayan-thookki naLLaa vidal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore