Kural 526

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

perungotaiyaan paeNaan vekuLi avanin
marungutaiyaar maanhilaththu il.

🌐 English Translation

English Couplet

Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains.

Explanation

No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

2 மணக்குடவர்

மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை. இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.

3 பரிமேலழகர்

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை. (மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் பெருங்கொடையாளியும் சினத்தை வெறுப்பவனுமாயிருப்பின் ; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன் போலச் சுற்றத்தையுடையார் இவ்வுலகத்தில் இல்லை. பெருங்கொடை வறுமை நீங்குமளவு கொடுப்பது . சினத்தொடு கொடுப்பின் கொடைத்தன்மை கெடுமாதலின், 'வெகுளிபேணான் 'என்றார்.

5 சாலமன் பாப்பையா

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

6 கலைஞர் மு.கருணாநிதி

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

7 சிவயோகி சிவக்குமார்

நிறைய கொடுப்பதும் சினத்தை சேர்க்காமலும் இருப்பவர் பக்கம் இருக்கும் சுற்றம் போல் மாநிலத்தில் மற்றவருக்கு இல்லை.

More Kurals from சுற்றந்தழால்

அதிகாரம் 53: Kurals 521 - 530

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature