"podhunhalaththaar punnalam thoayaar madhinhalaththin" Thirukkural 915 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார், எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார். இது புத்திமான் சேரானென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல்நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார். (மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தௌ¤வு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்'என்றும்,அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்'என்றும் கூறினார்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
மதி நலத்தின் மாண்ட அறிவினவர்- இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; பொது நலத்தார் புல் நலம் தோயார் - பொருள் கொடுத்தாரெல்லாரும் பொதுவாக நுகர்தற்குரிய விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற் படியார். இயற்கையான மதிநலம் முற்பிறப்புகளிற் செய்த நல்வினைகளாலும் கற்ற கல்வியாலும் அமைவது. மதிநலத்தாலேயே கல்வியறிவு மாட்சிமைப் படுதலால் 'மதிநலத்தின் மாண்டறிவினவர்' என்றும், மாட்சிமைப்பட்ட அறிவினர்க்கு விலைமகளிர் நலத்தின் பொதுமையும் புன்மையும் விளங்கித் தோன்றுதலால் 'தோயார்' என்றும், கூறினார்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
பொதுநலத்தாரின் புலன் இன்பத்தை விரும்பமாட்டார்கள் மனதின் நலத்தால் நல்லறிவு பெற்றவர்கள்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொது மகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்டமாட்டார்.
Thirukkural in English - English Couplet:
From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).
ThiruKural Transliteration:
podhunhalaththaar punnalam thoayaar madhinhalaththin
maaNda aRivi navar.