புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.
Transliteration
pukazhpata vaazhaadhaar thannhoavaar thammai
ikazhvaarai noavadhu evan.
🌐 English Translation
English Couplet
If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You've yourself to blame.
Explanation
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.
2 மணக்குடவர்
புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு? இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
3 பரிமேலழகர்
புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
புகழ்பட வாழாதார்-தமக்குப் புகழுண்டாக வாழாதவர்; தம் நோவார்-அது பற்றிப் பிறர் தம்மை யிகழ்ந்த விடத்து அதற்குக் கரணியமான தம்மையே நொந்து கொள்ளாது; தம்மை இகழ்வாரை நோவது எவன் - தம்மை யிகழ்ந்தவரை நோவது எதற்கு? புகழ்பட வாழாமையின் தீய விளைவு இங்குக் கூறப் பட்டது.
5 சாலமன் பாப்பையா
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.
6 கலைஞர் மு.கருணாநிதி
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?.
7 சிவயோகி சிவக்குமார்
சிறப்பாக வாழாதவர்கள் தன்னை கடிந்துக் கொள்ளாமல் தன்னை இழிவாக பேசுபவரை கடிந்துகொல்வதால் என்ன பயன்.
More Kurals from புகழ்
அதிகாரம் 24: Kurals 231 - 240
Related Topics
Because you're reading about Fame & Honor