திருக்குறள் - 411     அதிகாரம்: 
| Adhikaram: kelvi

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

குறள் 411 - திருவள்ளுவர் - ThiruValluvar

"selvaththut selvanj sevichselvam achselvam" Thirukkural 411 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்-ஒருவனுக்குச் சிறந்த செல்வமானது கேள்வியறிவாகிய செல்வம்; அச் செல்வம் செல்வத்துள் எல்லாம்தலை-அச்செல்வம் எல்லாச் செல்வங்களுள்ளும் தலைமையான தாகலான். செல்வங்கள் இருவகையும் மூவகையும் எண்வகையுமாகச் சொல்லப்படுவன. கல்வியுங் கேள்வியொடு தொடர்புடையதாய் அதனுளடங்குதலின், 'செல்வத்து ளெல்லாந்தலை' என்றார். 'கேடில் விழுச்செல்வம்' கல்வியென்பதும், 'மாடல்ல மற்றையவை' என்பதும் முன்னரே கூறப்பட்டன.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர்க்குச் சிறப்புடைய செல்வமானது செவியால் வரும் செல்வமாகும். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றையும் விடத் தலையாய செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செல்வங்களில் சிறந்த செல்வம் செவிச் செல்வம் ( நாதமான இறையை உணர்வதால்) அச் செல்வம் செல்வங்களில் முதன்மையானது.

Thirukkural in English - English Couplet:


Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

ThiruKural Transliteration:


selvaththut selvanj sevichselvam achselvam
selvaththu Lellaanh thalai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore