சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.
Transliteration
siRumaiyum sellaath thuniyum vaRumaiyum
illaayin vellum padai.
🌐 English Translation
English Couplet
Where weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory.
Explanation
An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
2 மணக்குடவர்
தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின், படை பகையை வெல்லும்.
3 பரிமேலழகர்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் - தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்: படைவெல்லும் - படை பகையை வெல்லும். (விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வெளவல் , இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உற்றுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும'¢ என்றார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தானை-படை; அடல்தகையும் ஆற்றலும் இல் எனினும்-பகைவர்மேற் சென்று கொல்லும் மறத்திறமும் அவர் தன்னை வந்து தாக்கினால் தாங்கும் வலிமையும் தனக்கில்லாவிடினும்; படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப்பொலிவாலும் வடிவு வகுப்புச் சிறப்பாலும் பெருமை பெறும். இல்லெனினும் என்னும் இழிவுசிறப் பும்மை அவற்றின் இன்றியமையாமையைக் காட்டிற்று. தோற்றப் பொலிவானது. சுவடிக்கப்பட்ட தேர்களும் படாம்போர்த்த யானைகளும் அணி பூட்டிய குதிரைகளும், குடை கொடி பதாகை முதலிய கண்கவர் எடுபிடிகளும், பல்லியமும் காள வகைகளும் செய்யும் ஓசை முழக்கமும், கூடிய ஆரவாரம். படை வகுப்பு, மேற் கூறப்பட்டது. பாடு பார்த்தவுடன் பகைவர் அஞ்சும் பெருமை. தென்னாலியிராமனின் 'எட்சண் டெருமைத்தோல்' (திலகாஷ்ட மகிஷபந்தனம்) கண்டோடிய வடநாட்டுப் புலவன்போல், வெளியாரவாரத்தைக் கண்டு வெருளும் படையும் உலகத்திலிருப்பதால், படைத்தகையாலும் பகைவரை மரூட்டலாம் என்றார். பதாகை-பெருங்கொடி.
5 சாலமன் பாப்பையா
எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.
7 சிவயோகி சிவக்குமார்
குழப்பமும், வேண்டப்படாத வெறுப்பும், தேவையை சந்திக்கமுடியா வறுமையும், இல்லாத படையே வெல்லும்.
More Kurals from படைமாட்சி
அதிகாரம் 77: Kurals 761 - 770