"soozhaamal thaanae mudiveydhum thamkutiyaith" Thirukkural 1024 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு-தம் குடியை யுயர்த்துதற்கேற்ற வினையைத் தவக்கமின்றி முயல்வார்க்கு; சூழாமல்தானே முடிவு எய்தும் -அம்முயற்சி அதற்கேற்ற சூழ்வினை வேண்டாது தானாகவே வெற்றியாக முடியும். தெய்வத்துணை யிருத்தலால், விரைந்த முயற்சி மட்டுமிருப்பின் எளிதாய் முடியும் என்பதாம். ’குடி’ ஆகுபொருளது.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
பிற காரணங்கள் இன்றி தானாகவே நல்முடிவு உண்டாகும் தம் குடிப் பெருமை அழியாதபடி செயல்படுபவற்கு.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு, அதன் வழிபற்றி அவர் ஆராயும் முன்பே, தெய்வ உதவியால், அது தானாகவே முடிந்துவிடும்.
Thirukkural in English - English Couplet:
Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.
ThiruKural Transliteration:
soozhaamal thaanae mudiveydhum thamkutiyaith
thaazhaadhu uGnatru pavarkku.