Kural 1296

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thaniye irundhu ninaiththakkaal ennaith
thiniya irundhadhen nenju.

🌐 English Translation

English Couplet

My heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan.

Explanation

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

2 மணக்குடவர்

என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது. இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) தனியே இருந்து நினைத்தக்கால்-காதலரைப் பிரிந்திருந்து அவர் செய்த கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால் ; என்னைத் தினிய என் நெஞ்சு இருந்தது-என்னைப் பிய்த்துத் தின்பதுபோல் துன்பஞ் செய்தற்கே என்உள்ளம் என்னொடுகூட இருந்தது. என் நெஞ்சு என்னோடிருந்தது.அவர் செய்த கொடுமைகளை எண்ணி எனக்கு ஆற்றாமைமேலுந் துன்பஞ் செய்தற்கேயன்றி , இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன் றென்பதாம்.

5 சாலமன் பாப்பையா

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

7 சிவயோகி சிவக்குமார்

தனியை இருந்து நினைத்திருந்த பொழுது என்னை தின்பது போல் இருந்தாயே என் நெஞ்சே.

8 புலியூர்க் கேசிகன்

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்த போது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பது போலத் துன்பம் தருவதாக இருந்தது!

More Kurals from நெஞ்சொடுபுலத்தல்

அதிகாரம் 130: Kurals 1291 - 1300

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature