தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.
Transliteration
theRaRka yaaraiyum thaeraadhu thaerndhapin
thaeRuka thaeRum poruL.
🌐 English Translation
English Couplet
Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide.
Explanation
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம்
2 மணக்குடவர்
யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக. இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.
3 பரிமேலழகர்
யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. ('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு, 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' :ஆகுபெயர்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
யாரையும் தேராது தேறற்க - எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க ; தேர்ந்தபின் தேறும் பொருள்தேறுக - ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரைநம்பி அவரிடம் ஒப்படைக்கக்கூடிய வினைகளைப்பற்றி ஐயுறற்க. உம்மை சிறப்பின்பாற் பட்டது . வினைவகையில் , 'தேறற்க' என்றது பொதுத்தேர்வும் தேறுக என்றது சிறப்புத்தேர்வும் பற்றியனவாகும். 'பொருள்' ஆகுபொருளது.
5 சாலமன் பாப்பையா
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
6 கலைஞர் மு.கருணாநிதி
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.
7 சிவயோகி சிவக்குமார்
ஆராயாமல் யாரையும் தேர்ச்சிப் பெற்றவராக ஏற்கக் கூடாது. தேர்ந்தெடுத்தப் பின்பு தேர்ச்சிப் பெரும் பொருள்களைக் கேட்டு தெளிய வேண்டும்.
More Kurals from தெரிந்துதெளிதல்
அதிகாரம் 51: Kurals 501 - 510