"thozhudhakai yullum padaiyotungum onnaar" Thirukkural 828 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¤யற்க'' என்பது கூறப்பட்டது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - பகைவரின் குறிப்புணர வல்லார்க்கு அவர் கும்பிட்ட கைக்குள்ளும் கொல்படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுது வடித்த கண்ணீர்க்குள்ளும் அங்ஙனமே மறைந்திருக்கும். கொல்லுதற்குப் பின்பு எடுக்க விருக்கும் படைக்கலம் முன்பு கை குவிப்பாலும் கண்ணீர் வடிப்பாலும் மறைக்கப்படுவதால் அவற்றிற்குள் 'படையொடுங்கும்' என்றார். தம் இளக்கங்காட்டி அழுதாலும் தொழுதாலும், அவர் செயலானன்றிக் குறிப்பாலேயே அவரியல்பை யறிந்து காத்துக்கொள்க வென்பதாம்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
தொழுகின்ற கையால் படையே அடங்கிவிடும் அதுபோல பகைவர் அழுகின்ற கண்ணிரில் வஞ்சகமும் இருக்கும்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
நம்மைத் தொழும்போது கூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும்; பகைவர் அழுதுவடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே!.
Thirukkural in English - English Couplet:
In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.
ThirukKural English Meaning - Couplet -Translation:
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
ThiruKural Transliteration:
thozhudhakai yuLLum padaiyotungum onnaar
azhudhakaN Neerum anaiththu.