"thunainhalam aakkam tharu um vinainhalam" Thirukkural 651 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். (வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
துணைநலம் ஆக்கம் தரும் - ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே தரும்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் - ஆயின் , வினையின் நன்மையோ செல்வம் உட்பட ஒருவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும். 'வேண்டிய வெல்லாம்' என்பன, இம்மையில் அறம் பொருளின்பமும் மறுமையில் புகழ் விண்ணின்பம் வீட்டின்பமு மாம். பிறர் துணையினுந் தூய்மை சிறந்ததென வினைத்தூய்மையின் சிறப்புக் கூறப்பட்டது. 'தரூஉம்' இசைநிறையளபெடை.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
ஒருவனுக்குத் துணையினது நன்மையாவது செல்வம் ஒன்றினை மட்டும் தரும். தொழிலினது நன்மையாவது அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
நல்ல துணை சிறந்த வெற்றியை தரும், நல்ல செயல் தேவையான அனைத்தும் தரும்.
Thirukkural in English - English Couplet:
The good external help confers is worldly gain;
By action good men every needed gift obtain.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.
ThiruKural Transliteration:
thuNainhalam aakkam tharu-um vinainhalam
vaeNdiya ellaanh tharum.