"udaiyar enappatuvadhu ookkam aqdhillaar" Thirukkural 591 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். ('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
உடையர் எனப்படுவது ஊக்கம் -ஒருவரைச் செல்வமுடையார் என்று சொல்லக் கரணியமாயிருப்பது முயற்சியுள்ளம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ - அம்முயற்சியுள்ளம் இல்லாதார் வேறேதேனும் உடையராயினும் உடையராவரோ ? ஆகார். வேறுடையது என்றது முதுசொம் எனப்படும் முன்னோர் தேட்டை . காக்கும் ஆற்றலின்மையால் அதையும் இழப்பர் என்பதாம் . எச்சவும்மை தொக்கது
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
ஒருவரை 'உடையவர்' என்று சொல்லச் சிறந்தது ஊக்கமே யாகும். அந்த ஊக்கம் இல்லாதார் வேறு யாது உடையவராயினும் உடையவர் ஆவாரோ?. ஆகார் என்பதாம்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
உலக நன்மைகளை பெற்றவர் எனப்படுவது உச்சாகமுடன் ஆர்வமாய் செயல்படுவது. அப்படி இல்லை என்றால் உள்ளதும் உள்ளபடி இல்லாமல் மாறும்.
Thirukkural in English - English Couplet:
'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?.
ThiruKural Transliteration:
udaiyar enappatuvadhu ookkam aqdhillaar
udaiyadhu udaiyaroa matru.