திருக்குறள் - 574     அதிகாரம்: 
| Adhikaram: kannottam

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

குறள் 574 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ulapoal mukaththevan seyyum alavinaal" Thirukkural 574 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? . அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள். ('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்- தகுந்த அளவிற்குக் கண்ணோட்ட மில்லாத கண்கள்; முகத்து உளபோல் எவன் செய்யும்- முகத்தில் உள்ளன போல் தோன்றுவதல்லது வேறென்ன பயன்தரும்? குருட்டுக் கண்ணிற்கும் கண்ணோட்ட மில்லாத கண்ணிற்கும் வேறுபாடில்லை .' எவன் செய்யும்? என்னும் வினா எதிர்மறை விடையை நோக்கிற்று.போதா அளவினின்று நீக்குதற்கு 'அளவினான் ' என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அளவு மீறாத கண்ணோட்டம் (தாட்சண்யம்) இல்லாத கண்கள், பார்ப்பதற்கு - பார்ப்பவர்களுக்கு - இருப்பதுபோலத் தோன்றுமே அல்லாமல் என்ன பயனைச் செய்யும்?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இருப்பதைப போல் முகத்தில் இருந்து என்ன செய்யும் அதன் தன்மையால் பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லாத கண்.

Thirukkural in English - English Couplet:


The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?.

ThiruKural Transliteration:


uLapoal mukaththevan seyyum aLavinaal
kaNNoattam illaadha kaN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore