Kural 730

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uLareninum illaarodu oppar kaLan-anjik
katra selachchollaa thaar.

🌐 English Translation

English Couplet

Who what they've learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they.

Explanation

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

2 மணக்குடவர்

உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.

3 பரிமேலழகர்

களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர். (ஈண்டுக் 'களன'¢ என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கற்ற களன் அஞ்சிக் செலச்சொல்லாதார் - தாம் கற்றவற்றை அவைக்கஞ்சி அதற்கேற்பச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் -உடலோடு கூடியுள்ளாரெனினும் உயர்ந்தோர் கருத்தில் இறந்தாரோ டொப்பர். களம் என்பது அவையையும் அவையிருந்த இடத்தையுங் குறிக்கும். ஆதலால் "ஈண்டுக் களனென்றது ஆண்டிருந்தாரை" என்னும் பரிமேலழகர் கூற்று வேண்டியதில்லை. இவ்வைங்குறளாலும் அவையஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது. உறுப்பியலின் முதற்பகுதியான அமைச்சியல்( அதி. 64-73) முற்றும்.

5 சாலமன் பாப்பையா

அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

6 கலைஞர் மு.கருணாநிதி

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

அறிவு இருந்தாலும் இல்லாதவர்களுக்கு சமமாகவே கருதப்படுவார்கள், அவைக்கு பயந்து கற்றதை தெளிவாய் எடுத்துச் சொல்லாதவர்கள்.

More Kurals from அவையஞ்சாமை

அதிகாரம் 73: Kurals 721 - 730

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature