Kural 798

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uLLaRka uLLam siRukuva koLLaRka
allarkaN aatraruppaar natpu.

🌐 English Translation

English Couplet

Think not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake.

Explanation

Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

2 மணக்குடவர்

தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக. இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.

3 பரிமேலழகர்

உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உள்ளம் சிறுகுவ உள்ளற்க-தம் ஊக்கங் குறைதற்குக் கரணியமான வினைகளைச் செய்யக் கருதா திருக்க; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க-துன்பக் காலத்திற் கைவிடுவார் நட்பைக் கொள்ளாதிருக்க. ஊக்கந் தளர்தற்குக் கரணியமாவன, தம் ஆற்றலுக்கு மிஞ்சிய வினைகளை மேற்கொள்ளுதலும் பயனில செய்தலுமாம். அவற்றை அறவே விடவேண்டுமென்பார் கருதலுஞ் செய்யாதிருக்க என்றார். 'ஆற்று' ஆற்றல்; முதனிலைத் தொழிலாகுபெயர். ஆற்றல் வலிமை ஆற்றறுத்தல்-வலியறுத்தல், அஃதாவது கைவிடுதல் . துன்பக் காலத்திற் கைவிடுவார் தொடர்புகொள்வதும் ஊக்கங் குறைக்கும் செயலாதலால், இங்கு உவமைக் கருத்துக்கொள்ளத் தேவையில்லை.

5 சாலமன் பாப்பையா

உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.

7 சிவயோகி சிவக்குமார்

எண்ணிக் கொண்டு இருக்க வேண்டாம் சிறுமைப்பட்ட எண்ணத்தை. தொடர வேண்டாம் துன்பத்தில் தொடர்பினைத் துண்டிக்கும் நட்பை.

More Kurals from நட்பாராய்தல்

அதிகாரம் 80: Kurals 791 - 800

Related Topics

Because you're reading about Testing Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature